கனமழை… எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
கனமழை காரணமாக, 20 மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 12) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில், இலங்கை தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதன்காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தநிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், திருவண்ணாமலை (கல்லூரிகளுக்கும் விடுமுறை), ராமநாதபுரம், திண்டுக்கல், திருவாரூர், நெல்லை ( 1 – 5 ஆம் வகுப்பு வரை மட்டும்) ராணிப்பேட்டை, கரூர், வேலூர் தூத்துக்குடி, திருப்பத்தூர், சேலம், அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட 20 மாவட்டங்களிலும் இன்று நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
யானை வழித்தடங்களில் மண் எடுக்க அனுமதி அளித்தது யார்? உயர் நீதிமன்றம் கேள்வி!