தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
தமிழகத்தில் இன்று கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம் , கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில்,
கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கன மழை காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (செப்டம்பர் 1) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை: வானிலை எச்சரிக்கை!