கடும் பனிப்பொழிவு: ரயில்கள் தாமதம்!

தமிழகம்

மூடு பனி காரணமாக சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இன்று (நவம்பர் 28) தாமதமாக இயக்கப்படுகிறது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தமிழகத்திற்கு மழைப் பொழிவை ஏற்படுத்தவில்லை. இதனால் சில நாட்களுக்கு தமிழகத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அதிகாலையில் பல இடங்களில் மூடு பனி பொழிகிறது.

இன்று காலை சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் எதிரே வரக்கூடிய வாகனங்கள் தெரியாத அளவிற்கு அதிகளவில் மூடு பனி நிலவி வருகிறது.

இதன் காரணமாக, காலை 7 மணி முதல் மின்சார ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் செல்லும் ரயில்கள் மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வரும் ரயில்கள் 10 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.

கடும் பனிப்பொழிவு நிலவுவதால், ரயில்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றன. இதனால் சென்னையின் புறநகர் பகுதிகளிலிருந்து அலுவலக வேலைக்காகச் சென்னைக்கு பயணிப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் கூட்டநெரிசலில் ரயிலில் தொங்கியபடி செல்கின்றனர்.

செல்வம்

சென்னை: தேவைக்கு அதிகமாக குடிநீரை சேமித்து பயன்படுத்த வேண்டாம்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *