ரயிலில் பயணம் செய்த விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழக விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் மெய்யநாதன்.
இவர் நேற்று (செப்டம்பர் 30) இரவு ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஏறினார்.
குளிரூட்டப்பட்ட முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த அமைச்சர் மெய்யநாதனுக்கு, நள்ளிரவு 2 மணியளவில், ரயில் சிதம்பரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது ரத்த அழுத்தம் காரணமாக வியர்த்துள்ளது.
இதனை அமைச்சர் மெய்யநாதன் தனது உதவியாளரிடம் கூறினார்.
அமைச்சருக்கு உடல் நலம் சரியில்லை என்று அவரது உதவியாளர் ரயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து சிதம்பரம் ரயில் நிறுத்தத்தில் , ரயில்வே போலீசார் அமைச்சர் மெய்யநாதனை பாதுகாப்பாக ரயிலிலிருந்து இறக்கி, சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அமைச்சர் மெய்யநாதனுக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமைச்சர் மெய்யநாதன் நலமுடன் இருப்பதாகவும், தொடர்ந்து அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், மருத்துவமனைக்கு நேரில் வந்து அமைச்சரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
தொடர்ந்து, அமைச்சர் அங்கிருந்து தனி கார் மூலம் மருத்துவ குழுவினர் உதவியுடன் சென்னை அழைத்து செல்லப்படுகிறார்.
செல்வம்
பாகிஸ்தான் வெற்றியை புரட்டி போட்ட பிலிப் சால்ட்
“இனி நாங்கள்தான் ஹீரோ”: வைத்திலிங்கம்