புதுச்சேரியில் அதிகரித்து வரும் இன்ஃபுளுயன்சா வைரஸ் காய்ச்சல் காரணமாக, 1 முதல் 8-ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 16-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இன்புளூயன்சா – ஏ வைரஸின் துணை வகையான H3N2 வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது.
இதனால் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிதல், காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்றத்தில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், “வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருவதன் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில்,
மார்ச் 16-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
பெட்ரோல் குண்டு வீச்சு: மதுபான விற்பனையாளருக்கு நேர்ந்த சோகம்!
போட்டித் தேர்வு: கட்டணமில்லா பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!