ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று (நவம்பர் 29) இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, மைசூரு, புவனேஸ்வர், கவுகாத்தி, புனே உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 13 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், இன்று காலை புனே, மஸ்கட், குவைத், மும்பையில் இருந்து சென்னை வந்த விமானங்கள் மோசமான வானிலை காரணமாக, விமானத்தை தரையிறக்க முடியாமல் வானில் வட்டமடித்தன. வானிலை சீரானதும் அந்த விமானங்கள் சென்னை விமான நிலையத்திலேயே பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன.
செல்வம்
‘ஃபெஞ்சல்’ புயல்: சென்னையில் காற்றுடன் கனமழை… வேளச்சேரி மேம்பாலத்தில் கார் பார்க்கிங்!
மக்களே அலர்ட்… சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ தொலைவில் ‘ஃபெஞ்சல்’ புயல்!