வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல், இன்று (நவம்பர் 30) மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் நேற்று (நவம்பர் 29) இரவு முதல் சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் இன்று காலை முதல் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல் இயக்கப்பட்டது.
இந்தநிலையில், அதிகனமழையால் தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலைய தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியது. இதனால், மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே இன்று தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, பொதுமக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளைஉடனுக்குடன்பெறமின்னம்பலம்வாட்ஸப்சேனலில்இணையுங்கள்….
“ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார்” – ஸ்டாலின் பேட்டி!
ஃபெஞ்சல் புயல்… வானில் வட்டமடித்த விமானங்கள்!