தொடக்க கல்வி பட்டய தேர்வு எழுதிய ஆசிரியர் தேர்வு பயிற்சி மாணவர்களின் தேர்வு முடிகள் செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இரண்டாண்டு தொடக்க கல்வி பட்டய படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் தகுதியை பெறுவார்கள்.
2018-ஆம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் ஆசிரியர் பயிற்சி நிறுவங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் 100-க்கும் குறைவான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தொடக்க கல்வி பட்டய தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தொடக்க கல்வி பட்டய தேர்வு எழுதிய ஆசிரியர் கல்வி பயிற்சி மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அவர்கள் படித்த ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலும் தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் செப்டம்பர் 27-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
விடைத்தாள்களை மறுகூட்டல் செய்யவும் ஒளிநகல் பெறவும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தொகையை சேர்த்து அக்டோபர் 3 முதல் 5-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்தி ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விடைத்தாள்களின் ஒளி நகல் வேண்டி விண்ணப்பித்தவர்கள் மட்டுமே மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியும். மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்கள் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செல்வம்
9 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்!
நிதி வழங்காத ‘டாஸ்மாக்’ நிறுவனம்: மூடப்படும் ஏழு ‘போதை மறுவாழ்வு மைய’ வார்டுகள்!