அடுத்த ஏழு நாட்களுக்கு வறண்ட வானிலை: வானிலை ஆய்வு மையம்!

தமிழகம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாக்கத்தால் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட கனமழையால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். கடந்த ஜனவரி 14-ஆம் தேதியுடன் வடகிழக்கு பருமழை ஓய்ந்தது.

இந்தநிலையில், குமரிக்கடல் பகுதிகளில்  நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜனவரி 16) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 17 முதல் 22 வரை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது

உறைபனி எச்சரிக்கை:

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆந்திரா காங்கிரஸ் கட்சி தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமனம்!

ஆளுநருக்கு திருவள்ளுவர் பற்றிய அடிப்படை புரிதல் இல்லை: கனிமொழி காட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *