மழை காலமான வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமையான இன்று டேஸ்ட்டி மற்றும் ஹெல்த்தியான உணவுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த சுக்கு சூப். அனைவருக்கும் ஏற்ற இந்த சூப், நாள் முழுக்க புத்துணர்ச்சியைத் தரும். அடுத்தடுத்த பணிகளை சுறுசுறுப்பாகச் செய்ய உதவும்.
என்ன தேவை?
சுக்குப் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்
ஒன்றிரண்டாக உடைத்த மிளகு – ஒரு டீஸ்பூன்
தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று (நறுக்கவும்)
துளசி, புதினா இலை – சிறிது
சோம்பு – அரை டீஸ்பூன்
வெள்ளைப் பூசணி – ஒரு துண்டு (2 இஞ்ச் அளவு)
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
அலங்கரிப்பதற்கு சில புதினா இலைகளை தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். பிரஷர் பானில் வெண்ணெயை சூடாக்கி கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் (உப்பு நீங்கலாக) சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு விசில் வரும்வரை வேகவிடவும். பிரஷர் நீங்கியதும் பெரிய கண் உள்ள வடிகட்டியால் வடிகட்டி, சூப் கிண்ணத்தில் ஊற்றி, புதினா சேர்த்துப் பரிமாறவும். விரும்பினால் வறுத்த ரொட்டி துண்டுகளை மேலே தூவிக்கொள்ளலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: அஜீரணமா… ஹார்ட் அட்டாக்கா… அடையாளம் காண்பது எப்படி?
கிச்சன் கீர்த்தனா: முடக்கத்தான் கீரை – காய்கறி பணியாரம்