கிச்சன் கீர்த்தனா – ட்ரை ஃப்ரூட்ஸ் சோமாஸ்

தமிழகம்

இப்போதுள்ள குழந்தைகளுக்கு சோமாஸ் என்பது புதிய உணவு வகையாகவே இருக்கிறது. சாப்பிடக் கொடுத்தாலும் வேண்டாம் என்று ஒதுக்கி விடுகிறார்கள். இந்த நிலையில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் சோமாஸின் உள்ளே ட்ரைஃப்ரூட்ஸ் வைத்து செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள். இன்னும் வேண்டும் என்று கேட்பார்கள்.  

என்ன தேவை?

 மைதா – கால் கிலோ
 பொட்டுக்கடலை, சர்க்கரை – தலா 100 கிராம்
 பாதாம், பிஸ்தா, முந்திரி – தலா 6
 கொப்பரைத் தேங்காய் – ஒரு மூடி (துருவிக்கொள்ளவும்)
 எள் – ஒரு டேபிள்ஸ்பூன்
 கசகசா – 2 டீஸ்பூன்
 ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
 நெய் – 2 டீஸ்பூன்
 எண்ணெய் – தேவையான அளவு
 உப்பு – ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

மைதாவுடன் 2 டீஸ்பூன் எண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து பூரி மாவுப் பதத்துக்குப் பிசைந்து வைக்கவும்.

பொட்டுக்கடலையைக் கொரகொரப்பாக அரைக்கவும். டிரை ஃப்ரூட்களையும் கொரகொரப்பாக அரைக்கவும். சர்க்கரையைப் பொடிக்கவும். தேங்காய்த் துருவலை ஒரு டீஸ்பூன் நெய்விட்டு நன்கு வறுத்து வைக்கவும். பிறகு வாணலியில் எள் சேர்த்து வெடித்ததும் கசகசா, அரைத்த டிரை ஃப்ரூட்ஸ் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி சர்க்கரைத்தூள், பொட்டுக்கடலை மாவு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். பூரணம் ரெடி.

பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி மாவு தொட்டுத் தேய்த்து சப்பாத்திகளாக்கவும். சப்பாத்தியில் நடுவில் பூரணம் நிரப்பி ஓர் ஓரத்தில் மைதா பேஸ்ட் வைத்து சப்பாத்தியை ஒட்டி, சோமா

ஸ் ரோலரில் கட் செய்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

கதம்ப முறுக்கு

ஃப்ரூட்டி சன்னா சாலட்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *