‘திடீர்னு பிக்னிக் போறோம்… அடுப்பில்லாம சமைக்குற மாதிரி ஏதாவது இருந்தா எப்படி இருக்கும்’ என்று நினைப்பவரா நீங்கள்… இதோ உங்களுக்கான ரெசிப்பி. இதை தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்டாகவும் செய்து கொண்டாடலாம்.
என்ன தேவை?
பாதாம் – 50 கிராம்
முந்திரி – 50 கிராம்
பிஸ்தா – 50 கிராம்
பூசணி விதைகள் – 50 கிராம்
விதையில்லா பேரீச்சம்பழம் – 100 கிராம்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
பாதாம், முந்திரி, பிஸ்தா, பூசணி விதைகள் ஆகியவற்றை பிளெண்டரில் கொர கொரவென அரைத்துக்கொள்ளவும். பின்னர் இதில் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். விதையில்லா பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி, அரைத்து வைத் திருக்கும் பொடியில் சேர்த்து சின்னச் சின்ன லட்டுகளாகப் பிடித்து வைத்துக்கொண்டு, தேவையானபோது பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அவதூறு வழக்கு: விஜயபாஸ்கருக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!