போதையில் வாகனம் ஓட்டினால் சொத்துகள் பறிமுதல்: போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை!

தமிழகம்

போதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் அபராத தொகை கட்டாவிட்டால், வாகனங்கள் அல்லது அசையும் சொத்துகளான நகைகள், விலையுயர்ந்த மொபைல், கை கடிகாரங்கள் மற்றும் லேப்டாப் போன்றவை பறிமுதல் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்து மரணங்கள் தமிழகத்தில் தான் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக கடந்தாண்டு மட்டும் தமிழகத்தில் 11,419 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மட்டும் 1,026 பேர் சாலை விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர்.

சாலை விபத்துகளைக் குறைக்க போக்குவரத்து போலீஸார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் புது திட்டத்தையும் அமல்படுத்தி வருகின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தில்,

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு மட்டும் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி 10,000 அபராதம் விதிக்கப்பட்டு அவை நீதிமன்றம் மூலமாக பெறப்பட்டு வருகின்றன.

கடந்த ஒரே மாதத்தில் போக்குவரத்து போலீஸார் எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக போதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து ரூ.3.5 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

போதை நபர்களுடன் வாகனங்களில் பயணிப்பவர்கள் போதையில் இருந்தால், அவர்களும் ரூ.10 ,000 அபராத தொகை கட்ட வேண்டும், என்பது தற்போது கடுமையான விதிமுறையாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அபராத தொகை கட்டாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனங்களோ அல்லது இதர வாகனங்களோ அல்லது அசையும் சொத்துகளோ நீதிமன்றங்கள் வாயிலாக பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இதேபோன்று நான்கு சக்கர வாகனத்தில் ஓட்டுநர் குடித்து விட்டு வாகனம் ஓட்டினால், அவருடன் பயணிக்கும் நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளது.

தெரிந்த ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநருடன் பயணம் செய்யும் போது அந்த ஓட்டுநர் மதுபோதையில் இருந்தால் பின் அமர்ந்து இருப்பவர்களுக்கும் அபராதம் வசூலிக்கப்படும்.

ஆனால் சவாரி செல்லும் போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: சிக்கன் பார்பிக்யு!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *