இரும்பு, கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி’ ஆகிய சத்துகள் நிறைந்தது முருங்கைக்காய். இதில் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் பாசிப்பருப்பு சேர்த்து சூப் செய்து குடித்தால் இருமல், தொண்டை வலி, நெஞ்சு எரிச்சல் நீங்கும். கோடையைக் குளுமையாக்கும்.
என்ன தேவை?
முருங்கைக்காய் – 4
பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம்
தக்காளி – தலா ஒன்று
பூண்டு – 4 பல்
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – ஒரு டீஸ்பூன்
வெண்ணெய், மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை, உப்பு – சிறிதளவு
எப்படிச் செய்வது?
முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி, வேகவிட்டு, ஆறியதும் சதைப்பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். பாசிப்பருப்பை மலர வேகவிட்டு மசித்துக்கொள்ளவும், பூண்டு, பெரிய வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு வெண்ணெய் சேர்த்து பூண்டு, வெங்காயத்தை வதக்கி, பிறகு தக்காளி சேர்த்து வதக்கி, மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பு, முருங்கைக்காய் விழுது சேர்த்து தேவையான நீர் ஊற்றி கொதிக்கவிடவும். கார்னஃப்ளார் கரைசலை சேர்த்து நன்றாக கலந்து, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கி… உப்பு, மிளகுத்தூள் தூவிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: தேங்காய்ப்பால் கோஸ் கறி
கிச்சன் கீர்த்தனா: மல்டி வெஜிடபிள் சூப்
போட்டி போட்டு சதமடித்த நரைன் – பட்லர் : கடைசி பந்தில் வென்ற ராஜஸ்தான்!
மின்னம்பலம் மெகா சர்வே: நீலகிரி… சிகரம் தொடுவது யார்?