கனமழை காரணமாக சென்னையில் முருங்கைக்காய், பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்ததால் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நாள்தோறும் அண்டை மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்துக்கேற்ப சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.
இந்த நிலையில் கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக இன்று (நவம்பர் 28) வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்தது.
குறிப்பாக நேற்று வரை மொத்த விலையில் கிலோ ரூ.250க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய், இன்று ரூ.350க்கு விற்பனையானது. சில்லறை விற்பனை கடைகளில் முருங்கைக்காய் கிலோ ரூ.380 வரை விற்பனை செய்யப்படுவதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்தனர். ஒரு முருங்கைக்காய் விலை ரூ.40ஆக அதிகரித்துள்ளது.
அதே போன்று பூண்டின் விலை கோயம்பேடு மார்க்கெட்டில் 1 கிலோ ரூ.450 ரூபாயாகவும் மற்றும் புறநகர் பகுதிகளில் 1 கிலோ ரூ.550 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.
மேலும் நேற்று தக்காளி விலை கிலோ 30 ஆக விற்கப்பட்டு வந்த தக்காளி, இன்று இருமடங்காக உயர்ந்து ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது.
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார் : உதயநிதி பங்கேற்பு!
இந்தியா வரவில்லையென்றால்… பிரம்மாஸ்திரதை கையில் எடுத்த பாகிஸ்தான்!
மலேசியாவின் அடையாளம்… தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் மறைவு : யார் இவர்?