கன்னியாகுமரி வந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கேரளா, லட்சத்தீவு, தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை 9 மணியளவில் கன்னியாகுமரி விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
விருந்தினர் மாளிகையில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரி படகு துறைக்கு சென்றார். அங்கிருந்து தனி படகு மூலம் விவேகானந்தனர் மண்டபம், திருவள்ளூவர் சிலையை பார்வையிட்டார்.
காலை 10.50 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரத்திற்கு செல்கிறார்.
குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை முதல் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளூர் சிலைக்கு சுற்றுலா பயணிகளுக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
செல்வம்
44 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட்: டிக்கெட் வாங்க திரண்ட ரசிகர்கள்!