draupadi murmu says students

“தமிழகத்தின் கலாச்சாரம் மாணவர்களை சிறந்தவர்களாக்கும்” – திரவுபதி முர்மு

தமிழகம்

தமிழகத்தின் நாகரீக கலாச்சாரம் மாணவர்களை சிறந்தவர்களாக்கும் என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 165-ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். திரவுபதி முர்மு மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் திரவுபதி முர்மு பேசும்போது, “பதக்கம் பெற்ற அனைத்து மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தின் நாகரீகம் மற்றும் கலாச்சாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சங்க தமிழ் இலக்கியங்கள் பாரம்பரியம் மிக்கது. திருக்குறள் நம்மை பல ஆண்டுகளாக நல்வழிப்படுத்துகிறது. தமிழகத்தின் கோவில்கள், சிற்பங்கள், சிலைகள் மனித வேலைப்பாடுகள் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகத்தின் நாகரீக கலாச்சாரம் இங்குள்ள மாணவர்களை சிறந்தவர்களாக்கும்.

சென்னை பல்கலைக்கழகம் பாலின சமத்துவத்திற்கு எடுத்துக்காட்டாகும். கல்வியை மாநிலத்தின் வளர்ச்சிக்காக முதலீடு செய்கிறோம். கல்வி கற்ற பெண்கள் சமூகத்தில் மிக முக்கியமான இடங்களுக்கு சென்றுள்ளனர். சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த பல மாணவர்கள் அறிஞர்களாகவும் பல முக்கியமான பதவிகளில் உள்ளனர். இந்தியாவின் 6 முன்னாள் குடியரசு தலைவர்கள் சென்னை பல்கலைக்கழத்தில் படித்தவர்கள் தான். முன்னாள் மாணவர்கள் பலரும் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்ய வேண்டும். மாணவர்கள் தங்களுக்கு வரும் சோதனைகளை தயக்கமின்றி எதிர்கொள்ள வேண்டும். உங்கள் இலக்கை அடைய வெற்றிகரமாக உழையுங்கள். எதிர்காலம் உங்களுக்கானது” என்று தெரிவித்தார்.

செல்வம்

இம்ரான் கான் கைதை கண்டித்து பாகிஸ்தான் முழுவதும் பிடிஐ போராட்டம்!

குப்பை மேட்டில் மருத்துவக் கழிவுகள்: டிரைவர்கள் தப்பியோட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *