சென்னை உயர்நீதிமன்றம்: 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்!

Published On:

| By Selvam

சென்னை உயர்நீதிமன்ற 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்தது. கொலிஜியம் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 5 பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

செல்வம்

குட்கா நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

இடைத்தேர்தல் வெற்றி: ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற இளங்கோவன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share