double decker chennai

சென்னையில் டபுள் டெக்கர் மெட்ரோ… பணிகள் விறுவிறு!

தமிழகம்

இந்தியாவிலேயே முதல் முறையாக டபுள் டெக்கர் மெட்ரோ சென்னையில் கட்டப்பட்டு வந்த நிலையில், அதன் கட்டுமான பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதாரம் முன்னேறுவதற்குப் போக்குவரத்து வசதிகள் மிகவும் முக்கியம். அந்த வகையில் நாடு முழுவதும் டெல்லி, பெங்களூரூ, கொல்கத்தா, நொய்டா, சென்னை போன்ற நகரங்களில் மக்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாகப் பயணிப்பதற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னையில் தற்போது இரண்டு மெட்ரோ வழித்தடங்கள் இருக்கின்றன. விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரை செல்லும் நீலநிற வழித்தடமும், சென்னை சென்ட்ரலில் இருந்து செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை செல்லும் பச்சை நிற வழித்தடங்கள் தான் அவை.

டபுள் டெக்கர் மெட்ரோ என்பது, இரண்டு மெட்ரோ ரயில்கள் ஒன்றின் மேல் ஒன்றாகப் போடப்பட்டிருக்கும் வழித்தடங்களில் செல்லும் மெட்ரோவாகும்.

மேலும், தற்போது கூடுதலாக சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் கீழ் மூன்று வழித்தடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இவற்றுக்கு ஊதா, ஆரஞ்சு, சிவப்பு எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆரஞ்சு வழித்தடத்தில் இருக்கும் ஆழ்வார்த்திருநகர் – ஆலப்பாக்கம் இடையில்தான் டபுள் டெக்கர் மெட்ரோ வழித்தடம் வரவிருக்கிறது.

இந்த 3.75 கிலோ மீட்டர் நீளமுள்ள டபுள் டெக்கர் வழித்தடம் ஆழ்வார்த்திருநகர், வளசரவாக்கம், காரப்பாக்கம், ஆலபாக்கம் ஆகிய நான்கு இடங்களை இணைக்கவிருக்கிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

நிலவில் அணு மின் நிலையம் … ரஷ்யாவுடன் சீனா, இந்தியா கைகோர்ப்பு!

விசிக மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு : உதயநிதி ரியாக்‌ஷன்!

இன்று எங்கெங்கு மழை பெய்யும் தெரியுமா?

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *