கோடைக்காலத்தில் உடலின் வெப்பத்தைச் சீராக வைத்துக்கொள்ள நீர்க்காய்களான முள்ளங்கி, வெண்பூசணி, வாழைத்தண்டு, வெள்ளரி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்ற காய்களை அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம்.
அப்படிப்பட்ட காய்களின் ஒன்று இந்த தோசைக்காய். ஆந்திர மெஸ்கள் அனைத்திலும் பரிமாறப்படும் இந்தத் தோசைக்காய்ச் சட்னியை நீங்கள் செய்ய இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை
தோசைக்காய் (சிறியது – 150 கிராம்) – ஒன்று (தோல் சீவி நறுக்கவும்)
காய்ந்த மிளகாய் – 5
புளி – சிறிதளவு
தனியா – ஒரு மீடியம் ஸ்பூன்
சீரகம் – ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் – 75 கிராம்
உப்பு – தேவைக்கேற்ப
கடுகு,உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு
எப்படி செய்வது
தோசைக்காயைத் தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் எண்ணெயில் வதக்கி, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அத்துடன் தோசைக்காயையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்து சேர்க்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: அரிசி அப்பம்
கிச்சன் கீர்த்தனா : முந்திரிக்கொத்து