Don't trust WhatsApp information

மகளிர் உரிமைத் தொகை: ’வாட்சப் தகவலை நம்ப வேண்டாம்’- ராதாகிருஷ்ணன்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக வாட்சப்பில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் ஆட்சியர் அருணா உள்ளிட்டோர் இன்று (ஜூலை 19)  ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ அடுத்த மூன்று நாட்களில் சென்னை நியாயவிலைக்கடைகளில் விரிவான தகவல் ஒட்டப்படும். சென்னையில் இரண்டு கட்டமாக முகாம் நடத்தப்படும்.

நாளை முதல் தெருவாரியாக டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் . வீடு தேடி வரும் விண்ணப்பங்களை ஆவணங்களுடன் மகளிர் பூர்த்தி செய்து வழங்கலாம்.

வங்கி கணக்கு இல்லாத தகுதி வாய்ந்த மகளிருக்கு வங்கிக் கணக்கு தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமைத் தொகை பற்றி வாட்ஸ் அப்பில் வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். நிரந்தர குடியிருப்பு மற்றும் முகவரி இல்லாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்.

பொதுமக்களுக்கு உதவ 500 கார்டு எண்ணிக்கைக்கு ஒரு தன்னார்வ அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சிறைக்காவலர்கள்: மிகை நேர பணிக்கான ஊதிய உயர்வு… அரசாணை வெளியீடு!

பேருந்தில் உம்மன் சாண்டி உடல்: கண்ணீருடன் பொதுமக்கள் அஞ்சலி!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts