உங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகம்

“பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்ய வேண்டாம். எல்லாக் குழந்தைகளுக்கும் ஏதோவொரு தனித்திறமை உள்ளது” என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

ஏற்காட்டில் இன்று (ஆகஸ்ட் 3) மான்ஃபோர்ட் பள்ளியின் 13வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கிவைத்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்குப் பதக்கங்கள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இதில் கலந்துகொண்டது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“புனிதர் மான்ஃபோர்ட் தனது இறுதிக் காலம் வரையிலும் கல்விப் பணியில் ஈடுபட்டிருந்தார்” என்று பதிவிட்டுள்ள அவர், “உடல் சார்ந்த விளையாட்டுகளிலும், உளவியல் சார்ந்த விளையாட்டுகளிலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆகையால் பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்யாதீர்கள்! எல்லாக் குழந்தைகளுக்கும் ஏதோவொரு தனித்திறமை உள்ளது என்பதை மறவாதீர்கள்” என அவர் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் மாணவிகளுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில், அவர் தொடர்ந்து இதுபோன்று அறிவுரைகளை வழங்கிவருகிறார்.

ஜெ.பிரகாஷ்

எடப்பாடி டெண்டர் வழக்கு: என்ன சொல்கிறார் ஆர்.எஸ்.பாரதி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *