போக்குவரத்து துறையை தனியார் மயமாக்காதே …அதிகாலையே ஆர்ப்பாட்டத்தை தொடங்கிய சி.ஐ.டி.யு!

தமிழகம்

சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.ஐ.டி.யு சார்பில் இன்று ( மார்ச் 6 ) அதிகாலையிலிருந்தே போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் 625 வழித்தடங்களில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சாதாரண பேருந்து, டீலக்ஸ் மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் என மொத்தம் 3436 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளுக்கு சிறிய ரக பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, சென்னையில் தனியார் பேருந்து சேவையை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , மாநகர போக்குவரத்து கழகத்தின் இந்த முடிவுக்கு ‘சி.ஐ.டி.யு’ கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதேபோல இன்று போக்குவரத்து பணிமனைகள் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தது. அதன்படி இன்று ( மார்ச் 6 )அதிகாலை 6 மணியளவில் சென்னை பல்லவன் இல்லத்தின் வெளியே சி.ஐ.டி.யு சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.போராட்டத்தில் போக்குவரத்து துறையை தனியார் மயமாக்காதே என்று முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர்.

Don privatize the transport CITU

மத்திய அரசானது பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது மாநில அரசே இது போன்று தனியார்மயத்தை ஊக்குவிக்கலாமா? என்று கேள்வி எழுப்பியதுடன் போக்குவரத்து கழகம் இருந்தால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் முதலமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

தமிழ் நாடு, பீஹார்: இரு மாநிலங்களின் வரலாறும், வதந்தி அரசியலும்

டேவிட் வார்னர் ரிட்டையர் ஆகியிருக்க வேண்டும்: ரிக்கி பாண்டிங் அதிரடி!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

1 thought on “போக்குவரத்து துறையை தனியார் மயமாக்காதே …அதிகாலையே ஆர்ப்பாட்டத்தை தொடங்கிய சி.ஐ.டி.யு!

  1. நல்ல முயற்சி தனியாருக்கு கொடுக்கும் பொழுது லாபங்கள் அரசாங்கத்திற்கு ஏற்படலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *