சிறுமி மீது கணவர் ஆசை: பணிப்பெண்ணின் மார்பில் அயர்ன்பாக்சால் சூடு வைத்த பெண்!

தமிழகம்

சென்னை அமைந்தகரை மேத்தா நகரைச் சேர்ந்த முகமது நிஷாத்துக்கு  நாசியா  என்ற மனைவி உண்டு. இவர்கள் வீட்டில்  தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை வேலைக்கு வைத்துள்ளனர்.  இந்நிலையில், கடந்த 1-ம் தேதி  வீட்டின் குளியல் அறையில் சிறுமி உடல் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.போலீஸார் நடத்திய விசாரணையில் முகமது நிஷாத் குடும்பத்தினர் சிறுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

இந்நிலையில் போலீஸாரிடம் நாசியா அளித்த வாக்குமூலத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது. அதில் அவர் கூறிருப்பதாவது, ”ஏற்கெனவே என் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால் எங்களுக்குள் தினந்தோறும் சண்டை வரும். சிறுமியின் மீதும் எனது கணவர் ஆசைப்படுவதாக சந்தேகப்பட்டேன். இதனால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி சிறுமியை தொடர்ந்து சித்ரவதை செய்ய தொடங்கினேன்.

சிறுமியின் நெஞ்சு பகுதி உட்பட பல இடங்களில் அயர்ன் பாக்ஸ் மூலம் சூடு வைத்தேன். எங்கள் வீட்டுக்கு வரும் என் கணவரின் நண்பர் லோகேஷ், அவரது மனைவி ஜெயசக்தியிடமும் சிறுமி திருடியதாக பொய் சொன்னேன். எனவே,  அனைவரும் சேர்ந்து சிறுமியை சித்திரவதை செய்தோம்.

தீபாவளி தினத்தில் லோகேஷ், ஜெயசக்தி, என் கணவரின் சகோதரி சீமா பேகம் மற்றொரு வேலைக்காரப் பெண் மகேஸ்வரி ஆகியோர் வந்திருந்தனர். அப்போது எனது மகனின் பிறப்பு உறுப்பை பிடித்து சிறுமி இழுத்துவிட்டதாக கூறி கத்தினேன். பின்னர், எல்லோரும் சேர்ந்து சிறுமியை அடித்ததில் சிறுமி இறந்து போனார் ”என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, தங்கள் மகளின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு போக கூட பணமில்லாமல் பெற்றோர் தவித்துள்ளனர்.இதனால் சென்னையிலேயே சிறுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 ரூ.100 கட்டணம்: சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி தொடக்கம்!

தென் மாவட்டங்களில் கனமழை… மக்களே உஷார்!

+1
1
+1
0
+1
4
+1
2
+1
1
+1
1
+1
5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *