Dog Stinging for Allergy Retrial Ordered

மின்னம்பலம் எதிரொலி: அலர்ஜிக்கு நாய்க்கடி ஊசி… மறு விசாரணைக்கு உத்தரவு!

தமிழகம்

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அலர்ஜி ஊசிக்கு மாறாக நாய்க்கடி ஊசி மாற்றிப் போட்டது போல், ஆளை மாற்றி சஸ்பெண்ட் செய்த விவகாரத்தைப் பற்றி மின்னம்பலம். காம் புலனாய்வு செய்தியின் எதிரொலியால் மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர் உயர் அதிகாரிகள்.

மின்னம்பலம். காம் தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிகையில் “அலர்ஜிக்கு நாய்க்கடி ஊசி… செவிலியர் சஸ்பெண்ட்: நடந்தது என்ன?” என்ற தலைப்பில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி விரிவான புலனாய்வு செய்தியை வெளியிட்டிருந்தோம்.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஜூன் 27 ஆம் தேதி காலை 8.00 மணிக்கு அலர்ஜிக்கு சிகிச்சைப் பார்க்க மகளை அழைத்து வந்தார் தந்தை கருணாகரன்.
சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் அலர்ஜிக்கு அவில் ஊசி போடுவதற்கு சீட் எழுதிக்கொடுத்தார்.

புற நோயாளிகள் பிரிவில் ஊசி போடும் அறைக்குள் அழைத்துச் சென்றார், அந்த அறையில் ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு, நாய்க்கடி ஊசி பிரிவு, இன்சுலின் ஊசி போடும் பிரிவு என நான்கு பிரிவு இருந்தது.

அந்த புற நோயாளிகள் பிரிவில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊசி போடுவதற்கு வருவார்கள், இவர்கள் அனைவருக்கும் அந்த அறையில்தான் ஊசி போடப்படும், இதனால் நோயாளிகள் எங்கே ஊசி போடுவது என்று குழப்பமாகிவிடுவார்கள்.

அப்படித்தான் பெண்கள் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணிசெய்த செவிலியர் லீனா பிரன்சி ஊசி போடாமல், அருகில் இருந்த செவிலியர் பயிற்சி பள்ளி மாணவி அவில் ஊசிக்கு மாறாக ( ஏ ஆர் வி) நாய்க்கடி ஊசியை போட்டுவிட்டார்.

இதை அறிந்த நிரந்தர செவிலியர் கண்ணகி மனிதாபிமான முறையில், ஏன் இந்த ஊசி போட்டிங்க என கண்டுபிடித்து சிறுமியை உள்நோயாளியாக சேர்த்து நல்ல சிகிச்சை கொடுத்து நல்ல முறையில் அனுப்பி வைத்த செவிலியரைத்தான் சஸ்பெண்ட் செய்துள்ளனர் என்ற செய்தியை விரிவாக வெளியிட்டிருந்தோம்.

மின்னம்பலம். காம் செய்தியைப் பார்த்த சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். உடனே டி எம் எஸ் சண்முகனி, கடலூர் அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநரிடம் கேட்டவர்,’ மறு விசாரணை நடத்துங்கள். தவறு செய்யாதவர் பாதிக்கப்படக்கூடாது. தவறு செய்தவரைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுங்கள்” என்றுள்ளார்.

அதன் காரணமாக நேற்று ஜூலை 3 ஆம் தேதி மதியம் 12.30 மணியிலிருந்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் சாரா செலின் பால் தலைமையில், சூப்ரென்ட் அசோக் பாஸ்கர், ஏ ஒ ஸ்ரீதர், செவிலியர்களுக்கு டூட்டி போடும் கிரேடு 1 பொறுப்பு செவிலியர்கள் கிரேடு 2 சீனியர் செவிலியர்கள் அனுசுயா, பிரேமலதா, ஜாஸ்மின், நாய்க்கடி ஊசி போட்ட பெண்கள் பிரிவு பொறுப்பு செவிலியர் லீனா பிரன்சி (ஒப்பந்த அடிப்படையில் பணிசெய்பவர்) ஆகியோர் மணி கணக்கில் மறு விசாரணை பற்றி தீவிரமான ஆலோசனைகள் செய்தனர்.

அப்போது செவிலியர் அனுசுயா, மேல் செவிலியர் ஒருவரிடம் மின்னம்பலம் என்ன பத்திரிகை, யார் ரிப்போர்ட்டர், இப்படி மறு விசாரணைக்கு வந்துவிட்டதே என்று குமுறிபோனாராம்.

நாம் ஜூன் 27 ஆம் தேதி புற நோயாளி ஊசி போடும் பகுதியில் வேலை செய்த ஒரு ஊழியரிடம் கேட்டோம்.

“ஆண்கள் பிரிவுக்கு கண்ணகி, பெண்கள் பிரிவுக்கு லீனா பிரன்சி, நாய்க்கடி ஊசி பிரிவுக்கு கவிதாவை நியமித்திருந்தாலும் அவரை வேறு பணிக்கு அனுப்பிவிட்டனர் (நான் கமினிகேபில் டிசிஸ் ஒ.பி ) அதாவது இன்சுலின் டோக்கன் எழுதி இன்சுலின் வழங்கவேண்டும்.

நாய்க்கடி பிரிவுக்கு செவிலியர் பள்ளி மாணவிகள் பார்த்துக்கொள்வார்கள்.
புற நோயாளிகள் ஊசி போடும் அறையில் இரண்டு அரசு செவிலியர் பள்ளி மாணவிகள், நான்கு தனியார் செவிலியர் பள்ளி மாணவிகள் மொத்தம் ஆறு மாணவிகள் இருந்துள்ளனர்.

அன்று வந்த சிறுமி சாதனா, பெண்கள் பிரிவில் நின்றுள்ளார். அப்போது பெண்கள் பிரிவு செவிலியர் லீனா பிரன்சி டோக்கன் எழுதிக்கொண்டு இருந்துள்ளார். அந்த நேரத்தில் தனியார் செவிலியர் பள்ளி மாணவி ஒருவர் நாய்க்கடி ஊசி என்று தவறுதலாக படித்துவிட்டு முதலில் டிடி ஊசி போட்டுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக அரசு செவிலியர் பள்ளி மாணவி இரண்டு கைகளிலும் நாய்க்கடி ஊசி போட்டுவிட்டார் இதுதான் நடந்தது, இதில் யாருடைய தவறும் இல்லை. டூட்டி போட்ட மும்மூர்த்தி செவிலியர்கள்தான் காரணம். அவர்களைக் காப்பாற்றிக்கொள்ள அப்பாவி செவிலியர் கண்ணகியை பலிகடாவாகிவிட்டார்கள்” என்றார்.

இந்த கூற்றுகள் பற்றி இணை இயக்குநர் சாரா செலின் பால் அவர்களைத் தொடர்புகொண்டு, ஊசி மாற்றிப் போட்டதுபோல் செவிலியரையும் மாற்றி சஸ்பெண்ட் செய்துவிட்டதாக சொல்கிறார்களே மேடம், என்னதான் உண்மை என்று கேட்டோம்.

”இடம் பற்றாக்குறையால் நான்கு ஒ பி, களும் ஒரு அறையில் இருந்ததால் குழப்பம் நடந்துவிட்டது. நானும் இப்போதுதான் பொறுப்புக்கு வந்துள்ளேன், விசாரணையில் அவர் (கண்ணகி) சரியாக சொல்லவில்லை. மறு விசாரணை நடத்த இருக்கிறோம்.

அதைப்பற்றி டி.எம்.எஸ் ஆபிஸிலிருந்து தகவல் வரும். அப்போது அவரையும் அழைத்து விசாரிப்போம். அதன் பிறகு சஸ்பெண்ட் ஆர்டரை சரிசெய்ய பார்ப்போம். விசாரணையில் உண்மை தெரிந்து நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

அலர்ஜி ஊசிக்கு நாய்க்கடி ஊசி போட்டதும், தவறு செய்யாத செவிலியரை சஸ்பெண்ட் செய்ததும், புற நோயாளிகள் ஊசி போடும் அறையில் தனியார் மற்றும் அரசு செவிலியர் பள்ளி மாணவிகளுக்கு அதிகாரம் கொடுத்ததும், அனைத்து தவறுக்கும் நிர்வாகமும், டூட்டி போடும் தலைமை செவிலியர்களான மூவரும்தான் காரணம் என தெரியவருகிறது நமது விசாரணையில்.

வணங்காமுடி

டிஜிட்டல் திண்ணை: கோட்டையின்  ‘மாமன்னன்’ உதயநிதி; குழப்பத்தில் அதிகாரிகள்! 

பணியின் போது நோ செல்போன் : போலீசாருக்கு அறிவுரை!

+1
0
+1
0
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *