கூடாமல்… குறையாமல்… தொடரும் தங்கம் விலை!

தமிழகம்

சென்னையில் தங்கம் விலையில் இன்று (ஜூலை 1) எந்தமாற்றமுன்றி சவரன் ரூ.53,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஜூன் 29ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ரூ.6,685க்கும், சவரன் ரூ.152 உயர்ந்து ரூ.53,480க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து 3வது நாளான இன்றும் தங்கம் விலையில் மாற்றமில்லை.

இன்று, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.6,685க்கும், சவரன் ரூ.53,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.7,155க்கும், சவரன் ரூ.57,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ஜூன் 26ஆம் தேதி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.94.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 குறைந்து ரூ.94,500க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, தொடர்ந்து 5 நாட்கள் வெள்ளி விலை எந்தவித மாற்றமுமின்றி விற்பனையானது.

இந்நிலையில், இன்று (ஜூலை 1) வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.94.70க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.200 உயர்ந்து ரூ.94,700க்கும் விற்பனையாகிறது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார் : எடப்பாடி இரங்கல்!

”என் கடைசி மூச்சு உள்ளவரை மறக்கமாட்டேன்”: இந்திய வீரர் குறித்து இர்பான் நெகிழ்ச்சி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0