சென்னையில் இன்று (ஜூலை 5) தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி சவரன் ரூ.54,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (ஜூலை 4) தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.6,760க்கும், சவரன் ரூ.520 உயர்ந்து ரூ.54,080க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமுமில்லை.
22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.6,760க்கும், சவரன் ரூ.54,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.7,230க்கும், சவரன் ரூ.57,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ஒரு ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ரூ.97.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,500 உயர்ந்து ரூ.97,500க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஜூலை 5) வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.97.70க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.200 உயர்ந்து ரூ.97,700க்கும் விற்பனையாகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாம்பன் கோவில் குடமுழுக்கு: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!