தங்கம் விலை இன்று (மே 29) சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.54,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (மே 28) ஒரு சவரன் தங்கம் விலை ரூ.160 உயர்ந்து, ரூ.53,920க்கு விற்பனையானது. இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.280 உயர்ந்துள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,775க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.54,200க்கு விற்பனையாகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.7,245க்கும், ஒரு சவரன் ரூ.57,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று கிராம் ரூ.101க்கும், ஒரு கிலோ ரூ.1,01,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிலோ தங்கம் விலை ரூ.1,200 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 20 காசுகள் உயர்ந்து, ரூ.102.20க்கும், ஒரு கிலோ ரூ.1,200 உயர்ந்து ரூ.1,02,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு : Chennai SETS -ல் பணி!