DMK woman councilor died

திமுக பெண் கவுன்சிலர் மரணம்: முதல்வர் இரங்கல்!

தமிழகம்

திமுக மாமன்ற உறுப்பினரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஷீபா வாசு மரணத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் 122வது வார்டில் போட்டியிட்டு 4,600 வாக்குகள் வித்தியாசத்தில் ஷீபா வாசு வெற்றி பெற்றார். மாநகராட்சி மேயர் வேட்பாளர் போட்டியிலும் இவரது பெயர் இடம் பெற்றிருந்தது.

இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (பிப்ரவரி 16) அதிகாலை உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் மரமணடைந்த ஷிபா வாசுவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

“சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், தி.மு.கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஷீபா வாசு இன்று (பிப்ரவரி 16) அதிகாலை உடல்நலக் குறைவால் மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன்.

மக்கள் பணியாளராகவும், கழகத்தின் செயல்வீரராகவும் இருந்து சிறப்புறப் பணியாற்றி வந்த அவரது மறைவு பெரிதும் வேதனையளிக்கிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும், 122-ஆவது வார்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

பல்லவன் விரைவு ரயில் மார்ச் 4 வரை ரத்து!

ஆற்றில் மூழ்கி மாணவிகள் பலியான விவகாரம்: ஆசிரியர் கைது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *