DMK is not a successor party but a policy successor party ki Veeramani Speech

மாடு மேய்த்தவன் மகன் ஐஏஎஸ் ஆவதை ஒழிக்கவே விஸ்வகர்மா திட்டம்: கி.வீரமணி

தமிழகம்

சென்னை கிழக்கு மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் `உடன்பிறப்பின் உயிர்துடிப்பு கலைஞர்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் ‘மாடு மேய்த்தவன் மகன் இன்று ஐஏஎஸ் ஆகிறான். இதை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்’ என்று திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியுள்ளார்.

“நான் கட்டும் வேட்டியும் அமைச்சர் சேகர்பாபு கட்டியுள்ள வேட்டியும் வெவ்வேறானது. ஆனால், இரண்டும் சேர்ந்து இருக்க வேண்டும். அதுவும் சாயம் போகாத காவி வேட்டியை அணிந்துள்ளவர் அமைச்சர் சேகர்பாபு.

திமுக வாரிசு கட்சி அல்ல, கொள்கை வாரிசு கட்சியாகும். எதிரிகளால் அசைக்க முடியாத காரணம் இதுபோன்ற கொள்கை வாரிசுதான்.

எந்த காலத்திலும் பெண்களுக்கு சுதந்திரம் இருக்கக் கூடாது என்பது சனாதனம். 1929ஆம் ஆண்டிலேயே சொத்து உரிமை, கல்வி உரிமைக்காக தீர்மானம் போட்டார் பெரியார்.

அதை ஏற்றுதான் 1989ஆம் ஆண்டில் பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்று பெண்களுக்கு சம உரிமை கொடுத்தவர் கலைஞர்.

அதன் தொடர்ச்சி தான் இன்று 1,000 ரூபாய் உரிமை தொகை வருகிறது. இந்தியாவிலேயே எங்குமே இந்தத் திட்டம் கிடையாது.

எந்த கொம்பனாலும் திராவிட இயக்கத்தை தொட முடியாது. கல்லூரிக்குச் சென்ற பெண்களுக்கு 1,000 ரூபாய் புதுமைப்பெண் திட்டம். இந்த திட்டத்தையெல்லாம் பார்த்து எதிரிகளுக்கு வயிறு எரிகிறது.

சனாதனம் குறித்து பேசுகிறார்கள். அந்த மாநாட்டுக்கு எப்படிப் போகலாம் என்கின்றனர். எங்கே, யார் போவது என்பது அவரது கருத்துரிமையாகும்.

அனைவருக்கும் படிப்பு கொடுப்பது திராவிட மாடல் ஆட்சி. ஆனால் குஜராத் மாடல் குல கல்வியைக் கொடுக்கிறது. விஸ்வகர்மா திட்டம் மூலம் தந்தை தொழிலை செய்ய சொல்கிறது.

மாடு மேய்த்தவன் மகன் இன்று ஐஏஎஸ் ஆகிறான். இதை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதை தடுக்க தான் நீட் தேர்வு. மத்தியப் பிரதேச தேர்தலில் பாஜக வராது, காங்கிரஸ் கட்சி தான் வரும் என்ற செய்தி வந்துள்ளது.

தென் மாநிலங்களில் பாஜக கிடையவே கிடையாது. மக்களுக்கு தேவை சமத்துவம் தான்” என்று பேசினார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: முளைகட்டிய பயறு சாலட்

பிக் பாஸ் சீசன் 7 : கேப்டன் பதவி; கலகத்தை தொடங்கிய BIGG BOSS!

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *