ரயில் சேவை புறக்கணிப்பு: திமுக கூட்டணிக் கட்சிகள் போராட்டம்!

தமிழகம்

திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் ரயில் சேவை பணிகளை தென்னக ரயில்வே தொடர்ந்து புறக்கணித்து வருவதாக, திமுக கூட்டணிக் கட்சிகள் இன்று (நவம்பர் 28) போராட்டத்தில் ஈடுபட்டன.

திருவாரூரில் இருந்து காரைக்குடி செல்லக்கூடிய அகல ரயில் பாதை பணிகள் நிறைவுற்று மூன்று ஆண்டுகள் ஆகியும் தினசரி ரயில் சேவை துவங்கப்படவில்லை. அதனை உடனடியாக துவங்க வேண்டும்.

மன்னார்குடியிலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 32 கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் மூன்று இடங்களிலும், நாகை மாவட்டத்தில் ஒரு இடத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

செல்வம்

பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது அழகினை மேம்படுத்திய 5 இந்திய நடிகைகள் இவங்க தானா!

சீருடைப் பணியாளர் தேர்வு: 67 ஆயிரம் பேர் ஆப்சன்ட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *