அனுமதி கிடைக்காவிட்டாலும் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து திக, திவிக, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் இன்று இரவு 10 மணிக்கு பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தருமபுர ஆதினத்தில் இந்த நிகழ்ச்சியின் போது ஆதீனகர்த்தரை சிவிகை பல்லக்கில் அமர்த்தி வீதியுலா நடத்துவது வழக்கம்.
மனிதர்களை மனிதர்களே சுமந்து செல்லும் இந்நிகழ்வை நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று கடந்தாண்டு பல்வேறு அமைப்புகள் தடைகேட்டன. அதன்படி மயிலாடுதுறை கோட்டாட்சியரும் பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு தடை விதித்தார்.
இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடையை விலக்கிக் கொண்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு பட்டினப்பிரவேசம் நிகழ்வு இன்று இரவு 10 மணிக்கு தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு திக, திவிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் மயிலாடுதுறையில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தவும் அக்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதற்கு அனுமதிகோரி பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ்குமாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை அனுமதி அளிக்கப்படாவிட்டாலும் தடையை மீறி பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
இன்று சென்னை வருகிறார் அமித் ஷா: பயண விபரம்!
ரஜினியுடன் 32 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் அமிதாப்பச்சன்
Comments are closed.