தீபாவளி பயணம்: மெட்ரோ முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் சொந்த ஊருக்குச் செல்ல இருப்பதால் நெரிசல் மிகு நேரங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ளது. சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகள் சொந்த ஊருக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.

கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு போக்குவரத்துக் கழகம் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இந்நிலையில் மெட்ரோ நிர்வாகமும் நெரிசல் மிகு நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்கப்போவதாக அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், “தீபாவளியை முன்னிட்டு நெரிசல் மிகு நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் இன்று(அக்டோபர் 20) முதல் 22 வரை மூன்று நாள்களுக்கு இரவு 10 மணி வரை நீட்டிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெரிசல்மிகு நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் மேற்குறிப்பிட்ட மூன்று நாள்கள் மட்டும் 5 நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரியா

பன்னீர் – பழனிசாமியை இணைக்கும் திமுக?

“ஆறுமுகசாமி அறிக்கை புரொபஷனல் கிடையாது” : அன்புமணி குற்றச்சாட்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment