தீபாவளி: பயணிகளின் வசதிக்காகச் சேவை எண்கள்!

தமிழகம்

தீபாவளி சிறப்புப் பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்துகொள்வதற்கும் புகார் தெரிவிப்பதற்கும் போக்குவரத்துக் கழகம் சேவை எண்களை அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துத் துறை சார்பில், தினசரி இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 16,888 பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

சிறப்புப் பேருந்துகளில் பயணிப்பதற்காகப் போக்குவரத்துக் கழகம் முன்பதிவு வசதிகளையும் ஏற்பாடு செய்திருக்கிறது.

எந்த ஊருக்கு எந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்துகள் புறப்படும் என்ற விவரத்தையும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி சிறப்புப் பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்துகொள்வதற்கும் புகார் தெரிவிப்பதற்கும் 9445014450 மற்றும் 9445014436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425615, 044-24749002 மற்றும் 044-26281611 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு அறை 24 மணி நேரமும் செயல்படும்.

பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள வசதியாக,

20 இடங்களில் “may i help you” என்ற பெயரில் தகவல் மையங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திப் பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மோனிஷா

தீபாவளி; எத்தனை சிறப்புப் பேருந்துகள்?

அக்டோபர் 14 அமைச்சரவைக கூட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *