தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு மக்கள் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (நவம்பர் 11) ஆய்வு செய்தார்.
சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்ல நவம்பர் 9,10,11 ஆகிய மூன்று தினங்களில் 10 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்தது.
அதன்படி நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்ற போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்களா, பயணிகளுக்கு ஏதேனும் சிரமங்கள் உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டார். இன்று சென்னை தாம்பரம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக சென்னையிலிருந்து கடந்த மூன்று நாட்களாக சிறப்பான முறையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம் பேருந்து நிலையங்களில் ஆய்வு செய்தேன். இன்று தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்தேன். 4.69 லட்சம் பேர் இதுவரை சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு பயணம் செய்திருக்கிறார்கள்.
மக்கள் எந்தவித சிரமும் இல்லாமல் எளிதாக பயணம் செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 63 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் இரவு பகல் பாராமல் உழைத்துள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்ததும் போக்குவரத்து நெரிசல் சீராகும். இரவு நேர பயணங்களை ஓட்டுநர்கள் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தீபாவளிக்கு முன்பாக ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் உரிமையாளர்களை சந்தித்து பேசியதன் விளைவாக கட்டணம் குறைவாக ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகிறது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணாமலை மணலை கயிறாக திரிக்க முடியாது: திருமாவளவன் காட்டம்!
அலுவலகத்தின் 10வது மாடியில் இருந்து குதித்து ஐ.டி. ஊழியர் தற்கொலை!
Comments are closed.