diwali special bus from november 9 2023

தீபாவளிக்கு எத்தனை சிறப்பு பேருந்துகள்?

தமிழகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9 முதல் 11 ஆம் தேதி வரை 10,975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கல்வி மற்றும் பணி காரணமாக வெளியூர்களில் தங்கியிருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.

இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்காமல் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9, 10,11 ஆகிய தேதிகளில் தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 4,675 பேருந்துகள் என மூண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10,975 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,920 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,895 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் நவம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தினசரி இயக்க கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,167 சிறப்புப் பேருந்துகளும் மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 9,467 பேருந்துகள் மற்றும் பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,825 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 13,292 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையம், கே.கே.நகர், மாதவரம் பேருந்து நிலையம் ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட உள்ளது.

ரெட்ஹில்ஸ், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.

ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பெருநகர பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புதுச்சேரி, கடலூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி, திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஊர்களை தவிர்த்து பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்ப நவம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் 9,467 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது கல்வீச்சு: எடப்பாடி கண்டனம்!

”போரை நிறுத்துங்கள்”: ஐநா தீர்மானம் நிறைவேற்றம்… இந்தியா புறக்கணிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *