தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 1ஆம் தேதியை அரசு விடுமுறையாக தமிழ்நாடு அரசு இன்று(அக்டோபர் 19) அறிவித்துள்ளது.
இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி வருகிறது. இதனையொட்டி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்தி நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
பொதுவாக சென்னை, கோவை போன்ற வெளிமாவட்டங்களில் வேலை செய்யும் மக்கள், தீபாவளி பண்டிகைக்கு தங்களது சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். இதனால் ரயில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதும்.
மேலும் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறையாக இருந்தால், வேலை செய்யும் ஊர்களுக்குத் திரும்புவதற்கு வசதியாக இருக்கும். எனவே நவம்பர் 1ஆம் தேதிக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என ஊழியர்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 1ஆம் தேதி அன்றும் விடுமுறை அறிவித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “இவ்வாண்டு தீபாவளியை அக்டோபர் 31 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நவம்பர் 1 அன்று ஒரு நாள் மட்டும்,
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
Maharashtra Elections: தொகுதி பங்கீட்டை உறுதி செய்த அமித் ஷா… சண்டை போடும் எதிர்க்கட்சி கூட்டணி!
”வந்து விளையாடிட்டு ஒரே நாள்ள போயிடுங்க” : பாகிஸ்தான் ஐடியா!
20 ஆண்டுகளில் செவ்வாயில் மனித குடியிருப்பு… மஸ்க் திட்டம்… அந்த 100 பேர் யார்?