தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் செல்வோருக்கான முன்பதிவு இன்று (ஜூலை 12) முதல் தொடங்கியுள்ளது.
வரும் நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக ரயில் பயணம் மேற்கொள்வதற்கு வசதியாக 4 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 9 ஆம் தேதி பயணிக்க விரும்புவோர் இன்று காலை 8 மணி முதல் ரயில்வே கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி இன்று காலை முன்பதிவு தொடங்கிய 10 மிடங்களிலேயே சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.
இதனையடுத்து நவம்பர் 10ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை காலையும், தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 11 ஆம் தேதிக்கான முன்பதிவு, ஜூலை 14ஆம் தேதியும் தொடங்குகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா