களைகட்டும் தீபாவளி பண்டிகை : தலைவர்கள் வாழ்த்து!

Published On:

| By Minnambalam Login1

diwali greetings leaders

இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இன்று(அக்டோபர் 31) தீபாவளி பண்டிகையை, வெடி வெடித்து, இனிப்புகள் பரிமாறி சந்தோஷமாகக் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

தீபாவளி திருநாளில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி

நாட்டு மக்களுக்கு எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த தீபத் திருநாளில், அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், வளமாகவும் வாழ வாழ்த்துகிறேன். லட்சுமி மற்றும் விநாயகரின் ஆசியுடன் அனைவரும் செழிப்பாக இருக்கட்டும்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

அன்னை லட்சுமி நம் இதயங்களை அளவற்ற அன்பு மற்றும் ஆழ்ந்த இரக்கத்தால் ஒளிரச் செய்து, அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், செழிப்பு, சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வளர்த்து அருள் புரிவாராக.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளித் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

தவெக தலைவர் விஜய்

தீபங்களின் ஒளி வெள்ளத்தில் காரிருள் விலகி, நல்விடியல் பிறக்கட்டும். அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பு, அமைதி, செல்வம் நிலைத்து நீடித்திருக்கட்டும். தீப ஒளித் திருநாளைப் பாதுகாப்பாகக் கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

தீபாவளி திருநாள் நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் சகோதரத்துவத்தையும் பலப்படுத்துகிறது. சாதி மத பேதங்களைக் கடந்து கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

பாரத தேசமெங்கும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிற தீப ஒளித் திருநாளான, தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகிற அனைவருக்கும் எனது அன்பார்ந்த தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டியதை நினைவு கூறுகின்ற தினமாக, தீப ஒளி ஏற்றி நாம் போற்றுகின்ற இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் இன்பம் மேலோங்கி, நல்ல ஆரோக்கியத்துடன் நலமாக வாழ்ந்திடவும், பாதுகாப்பான முறையில் அதிக அளவிலான பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்திடவும் அன்புடன் வாழ்த்துகிறேன்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுங்கள். வழக்கம் போல் மற்ற மதத்தவர்களோடு வாழ்த்துகளையும் இனிப்புகளையும் பகிர்ந்து கொள்வோம்.

இந்த தீபாவளி பண்டிகையை மத நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கொள்வோம்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

தீபாவளி… அவசர உதவிக்கு 1,350 ஆம்புலன்ஸ்கள் தயார்: உதயநிதி

தமிழக அரசின் ‘கபீர் புரஸ்கார் விருது’க்கு விண்ணப்பிக்கலாம்!

பியூட்டி டிப்ஸ்: ஆன்லைனில் ஆடைகள் வாங்கப் போறீங்களா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel