நெருங்கும் தீபாவளி: இனிப்பு விலையை உயர்த்திய ஆவின்

தமிழகம்

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஆவின் நிறுவனம் இனிப்பு வகைகளின் விலையை  20 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.

ஆவின் நிறுவனம், பால் மட்டுமின்றி வெண்ணெய், நெய், பனீர் உள்ளிட்ட 200 வகையான பால் பொருட்கள் விற்கப்படுகின்றன.

இவை, ஆவின் நேரடி விற்பனை நிலையங்கள் மட்டுமின்றி, தனியார் பாலகம், சூப்பர் மார்க்கெட், மளிகை மொத்த விற்பனை கடைகளிலும் விற்கப்படுகின்றன.

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை வரும் நிலையில்  ஆவின் இனிப்பு வகைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்குவது வழக்கம். இந்த நிலையில் ஆவின் நிர்வாகம் இனிப்பு வகைகளின் விலையை ரூ. 20 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை உயர்த்தி உள்ளது.

குலோப் ஜாமுன் 125 கிராம் 45 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும், ரசகுல்லா 100 கிராம் 40 ரூபாயில் இருந்து 45 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

பால்கோவா 500 கிராம் 210 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகவும், மைசூர் பாக்கு 500 கிராம் 230 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகவும், சக்கரையில்லா பால்கோவா 1 கிலோ 520 ரூபாயிலிருந்து 60 ரூபாய் முதல் அதிகபட்சமாக 80 ரூபாய் வரை உயத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு 17 வகையான பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று(செப்டம்பர் 16) முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் தயிர் மற்றும் நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்தி அறிவித்தது. தற்போது, ஆவின் நிறுவனத்தின் இனிப்பு வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கலை.ரா

சல்லாப டாக்டருக்காக போலீஸ் நடத்திய கட்டப் பஞ்சாயத்து!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.