தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 15 நாட்கள் பட்டாசு விற்பனை நடைபெறும் என்று சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது.
அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி என்றாலே பட்டாசு தான். பட்டாசு விற்பனைக்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற உரிய ஆவணங்களுடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஏற்கனவே அறிவித்தனர்.

இந்நிலையில் அக்டோபர் 11ம் தேதி முதல் 25ம் தேதி வரை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நடைபெறும் என்று சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக தீவுத்திடலில் 55 பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் பட்டாசு விற்பனையில் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே கடைகள் அமைக்க அனுமதி தரப்பட்டுள்ளது. விபத்தை தவிர்க்க ஒவ்வொரு கடைக்கும் இடையே 3 மீட்டர் இடைவெளி விட்டு கடைகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்தியாளர் சங்கமும் கடைகள் அமைக்கலாம் என்று சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
கலை.ரா