கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

தமிழகம்

தீபாவளி பண்டிகையானது நவம்பர் 12-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை சிறப்பாக கொண்டாட தமிழ்நாட்டில்‌ உள்ள கூட்டுறவுச்‌ சங்கங்களில்‌ பணிபுரியும்‌ ஊழியர்களுக்கு  2022-2023 ஆண்டுக்கான போனஸ் மற்றும்‌ கருணைத்‌ தொகை வழங்க முதல்வர்‌ ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

போனஸ்‌ சட்டத்தின்‌ கீழ்‌ வரும்‌ கூட்டுறவுச்‌ சங்கங்களில்‌ பணிபுரியும்‌ பணியாளர்களுக்கு சென்ற ஆண்டைப்‌ போலவே அவர்களுடைய சம்பளத்தில்‌ 1௦ சதவீதம்‌ போனஸ்‌ (போனஸ்‌ மற்றும்‌ கருணைத்‌ தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

போனஸ்‌ சட்டத்தின்‌ கீழ்‌ வராத, தலைமைச்‌ சங்கங்கள்‌ மற்றும்‌ மத்திய சங்கங்களின்‌ பணியாளர்களுக்கு ரூ.3000, தொடக்க சங்கங்களின்‌ பணியாளர்களுக்கு ரூ.2,400 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத்‌ தொகையாக வழங்கவும்‌ ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள தலைமை கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌, மத்திய கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ மற்றும்‌ தொடக்க கூட்டுறவு சங்கங்கள்‌ ஆகியவற்றில்‌ பணிபுரியும்‌ 44,270 பணியாளர்களுக்கு ரூ. 28 கோடியே ஒரு லட்சம்‌ போனஸ்‌ மற்றும்‌ கருணைத்‌ தொகை வழங்கப்படவுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிகார் மாநில சாதிவாரி கணக்கெடுப்பு முழு விவரங்கள் வெளியீடு!

கொடநாடு வழக்கு : எடப்பாடிக்கு நீதிமன்றம் விலக்கு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *