குறைந்த விலையில் பட்டாசு தருவதாக கூறி ஆன்லைனில் புதிய மோசடி நடைபெறுவதாக சைபர் க்ரைம் காவல்துறை எச்சரித்துள்ளது.
தீபாவளி பண்டிகை, நவம்பா் 12ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. இதற்காக தற்காலிக பட்டாசுக் கடைகளும் ஆங்காங்கு திறக்கப்பட்டு வருகின்றன. பட்டாசுக் கடைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு கடுமையான விதிமுறைகளை வெடி பொருள் சட்டத்தின் கீழ் தீயணைப்புத் துறை விதித்துள்ளது.
தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்றால்தான், அந்தந்த மாநகர காவல் துறை அல்லது வருவாய்த் துறையிடமிருந்து உரிமம் பெற முடியும். பட்டாசுகளை ஒழுங்குப்படுத்துவற்காக தீயணைப்புத் துறை இயக்குநா் அலுவலகத்தில் இருந்து மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு வெடி பொருள் சட்டத்தின்படி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னா் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறைந்த விலையில் பட்டாசு தருவதாக கூறி ஆன்லைனில் புதிய மோசடி நடைபெறுவதாக சைபர் க்ரைம் காவல்துறை எச்சரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் மோசடி குறித்த புகாரினை www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்று சைபர் க்ரைம் காவல் துறை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
50 சதவிகிதம் விசைத்தறி உற்பத்தி குறைப்பு: காரணம் என்ன?
Bigg Boss 7 Day 33: பிரதீப்புக்கு ரெட் கார்டு… கமல் தூவிய அரசியல் நெடி!