தீபாவளி போனஸ் முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு போக்குவரத்து ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது வழக்கம். இது கொரோனா பரவலுக்கு முன்பாக 20 சதவிகிதமாக இருந்தது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு என்று கூறி கடந்த ஆண்டு 10% போனஸ் மட்டுமே வழங்கப்பட்டது.
அரசு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தமிழ்நாடு தேயிலை தோட்டம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 8.33 சதவிகித போனஸ் மற்றும் 1.67 சதவிகித கருணைத்தொகை உட்பட 10 சதவிகித போனஸ் வழங்கப்பட்டது.
இந்த சூழலில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் 20% போனஸ் வழங்க வேண்டும் என்று சிஐடியு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சிஐடியு – போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் போக்குவரத்து துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், “வருகிற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை வர உள்ளது. போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு பண்டிகை முன்பணம் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக வழங்க வேண்டுமென 12(3) ஊதிய ஒப்பந்தத்தில் இறுதிப் படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கடந்த ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. சமீபகாலமாக பண்டிகை முன்பணம் உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை. எனவே இந்த ஆண்டு பண்டிகை முன்பணம் 10,000 ரூபாய் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் “என கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
AUSvsSA: சவாலான ஸ்கோர் குவித்த தென்னாப்பிரிக்கா… ஜெயிக்குமா ஆஸ்திரேலியா?
அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான வழக்கு : நீதிபதி உத்தரவு!