தீபாவளிக்கு 2.64 லட்சம் மெ.டன் ரேஷன் பொருட்கள் விநிநோகம்!

தமிழகம்

தீபாவளியை முன்னிட்டு 2.64 லட்சம் மெ.டன் அத்தியாவசியப் பொருள்கள் தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ரேஷன் பொருட்களுக்குப் பதில் ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமோலின் ஆயில் ஆகியன தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாகக் கொள்முதல் செய்து 355 கிடங்குகளில் இருப்பில் வைத்து 36,578 நியாய விலை அங்காடிகளின் மூலம் 2,23,86,333 குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

“தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை அங்காடிகளுக்கு 2,28,191 மெ.டன் அரிசி, 19,170 மெ.டன் சர்க்கரை, 5,321 மெ.டன் கோதுமை, 10,972 மெ.டன் துவரம் பருப்பு, 1 கோடியே 12லட்சம் பாமோலின் பாக்கெட்டுகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பொருள்கள் இரண்டு நாள்களில் அனுப்பி வைக்கப்படும்” என்று உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை ஒதுக்கீட்டின்படி கிடங்கில் இருந்து நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டிருப்பதையும், அங்காடிகளில் போதுமான அளவு இருப்பு வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதையும், சென்னை தரமணியில் உள்ள அமுதம் நியாய விலை அங்காடிகளில் இன்று (நவம்பர் 7) அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார்.

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்குப் பதில், பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ. 490 செலுத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதற்காக, 3.37 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ.490 வழங்க ரூ. 16.53 கோடி புதுச்சேரி அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

எங்கள் சின்னம் புயல் சின்னம்: அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: மத்திய அமைச்சர் கமல்…திமுக வீசும் தொகுதித் தூண்டில்!

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *