ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பேருந்து இயக்குவது கண்டறியப்பட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சிலர் பணியின் போது மது அருந்தி இருப்பதாக தொடர்ந்து போக்குவரத்துத்துறைக்கு புகார்கள் வந்தன.
மது அருந்திவிட்டு பேருந்தை இயக்குவதால் விபத்துகள் அதிகம் நிகழ்கிறது என்றும், உயிருக்கே ஆபத்தான நிலையில் பயணிப்பதாகவும் அச்சம் தெரிவித்தனர்.
இதையடுத்து அனைத்து கோட்ட மேலாளர்களுக்கும், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மது அருந்திய நிலையில் பணிபுரிவது சட்டப்படி குற்றமாகும்.
இதன் காரணமாக பயணிகள் பேருந்தில் பயணிப்பதை தவிர்க்க வாய்ப்புள்ளது. ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின் பொழுது மது அருந்திய நிலையில் பணிபுரியக் கூடாது.
மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் சம்பந்தப்பட்டவர் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை (அடிப்படை சம்பளம் குறைப்பு, பணி நீக்கம்) மேற்கொள்ளப்படும். பணியில் ஒழுங்கீனத்திற்கு இடம் கொடுக்காமல் பணிபுரியவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கலை.ரா
மருந்து தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்
ரூ.1200 கோடி மதிப்புள்ள ஆப்கானிஸ்தான் ஹெராயின் பறிமுதல்!