சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதை பருவ மழைக்காலம் முடிந்த பின்னர் தான் திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளும் கடல் அழகை அருகில் சென்று ரசிக்கும் வகையில் மெரினா கடற்கரை மணல் பரப்பில் 380 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் சிறப்பு பாதை அமைக்கப்பட்டது.
ரூபாய் ஒரு கோடி செலவில் மரப்பலகையால் பாதை அமைக்கப்பட்டு, கடந்த நவம்பர் 27ம் தேதி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இந்தப் பாதையை திறந்து வைத்தார்.
இந்தநிலையில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக மரப்பாதை கடுமையாக சேதமடைந்தது. நேற்று முதல் பாதை சேதமடைந்த இடத்தில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கடல் அலை உள்வரும் தூரம் கணக்கிட்டு சிறப்பு பாதையின் நீளம் சற்று குறைக்கப்படவுள்ளதாகவும், மழைக்காலம் முடிந்த பிறகு பார்வையிடும் தளம் சீரமைக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மெரினாவில் மாற்றுத்தினாளிகளுக்கான சிறப்பு பாதை சேதமடைந்த இடத்தில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
மார்கழி மாதம் பிறப்பு: திருச்செந்தூர் கோயிலில் பூஜை நேரங்கள் மாற்றம்!
அன்று பால், இன்று நெய்: விலை உயர்த்திய ஆவின்