சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை சீர் செய்யப்பட்டு நாளை மீண்டும் திறக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் கடல் அழகை அருகில் சென்று ரசிக்கும் வகையில் மெரினா கடற்கரை மணல் பரப்பில் 380 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் சிறப்பு பாதை அமைக்கப்பட்டது.
கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் ரூபாய் ஒரு கோடி செலவில் பாதை அமைக்கப்பட்டு, கடந்த நவம்பர் 27ம் தேதி இந்தப் பாதை பயன்பாட்டுக்கு வந்தது.

இந்தப் பாதையை மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சியுடன் பயன்படுத்தி வந்தநிலையில், மாண்டஸ் புயல் காரணமாக இது பலத்த சேதமடைந்தது.
இதையடுத்து பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன் வைத்தனர். இந்தநிலையில் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
பணி நிறைவடைந்து நாளை மீண்டும் திறக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் கூறியிருக்கிறார்.
கலை.ரா
இயக்குநர் பாடி ஷேமிங்: மன்னிப்பு கேட்ட மம்மூட்டி
2024 தேர்தல்: பாமகவினருக்கு அன்புமணியின் அசைன்மென்ட்!