dindigul people request

இரவு 10 மணிக்கு மேல்… போக்குவரத்து கழகத்தின் முடிவால் மக்கள் குஷி!

தமிழகம்

திண்டுக்கல் மண்டலம் மூலம் இயக்கப்படும் அனைத்து தொலைதூர புறநகர் பேருந்துகளை ஓட்டும் ஓட்டுநர்கள், இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் கேட்கும் இடத்தில் , அவர்களை இறக்கி விட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள், இரவில் பேருந்துகளில் பயணிக்கும் போது, சில பேருந்து நிறுத்தங்கள் பாதுகாப்பாக இல்லாத காரணத்தால், தாங்கள் கேட்கும் இடத்தில் பேருந்தை நிறுத்த வேண்டும் என்று ஓட்டுநர்களிடமும் நடத்துநரிடமும் சொல்லி வந்தார்கள்.

ஆனால் அப்படி அவர்கள் கேட்கும் இடத்தில் ஓட்டுநர்களோ அல்லது நடத்துநரோ நிறுத்துவதில்லை என்று தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகிகளிடம் புகார் அளித்திருந்தார்கள்.

இது சம்பந்தமாகக் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி தமிழக அரசுப் போக்குவரத்து கழகம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அதில் “திண்டுக்கல் மண்டலம் மூலம் இயக்கப்படும் நகரப் பேருந்து வசதி இல்லாத நேரமான இரவு நேரங்களில், பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கோரும்பட்சத்தில் இறக்க வேண்டிய நிறுத்தத்தின் பாதுகாப்பினை அறிந்து. அதற்கேற்ப அவர்களை இறக்கிவிட்டுச் செல்லுமாறு, இதுபோன்ற புகார்கள் எழாவண்ணம் பணிபுரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே, திண்டுக்கல் மண்டலம் மூலம் இயக்கப்படும் அனைத்து தொலைதூர புறநகர் பேருந்துகளும் இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் கேட்கும் நிறுத்தத்தில் நிறுத்திச் செல்ல தடத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் புகார் வராவண்ணம் பணிபுரிய இதில் கிளை மேலாளர்கள் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பயணிகளிடமிருந்து புகார் பெறப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது துறைசார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சுற்றறிக்கையை அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களும் தெரிந்து கொள்ளும் வண்ணம் தகவல் பலகையில் ஒட்டியும், தகவல் நோட்டில் கையொப்பம் பெறவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையின் மூலம் திண்டுக்கல் மக்களின் கோரிக்கை நிறைவேறியுள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ஸ்ருதி வாழ்க்கையில் விளையாடும் எமன்… நிலச்சரிவில் குடும்பமே பலி… விபத்தில் வருங்கால கணவரும் இறப்பு!

விலை குறைந்த தங்கம்.. வாங்குவதற்கு சரியான நேரம்!

பன்னுக்கு ஜிஎஸ்டி இல்ல.. ஆனா அதுல வைக்குற க்ரீமுக்கு 18% ஜிஎஸ்டியா? : குமுறிய தொழிலதிபர்.. நிர்மலா சீதாராமன் ஷாக்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *