கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை சரக டிஐஜியாக விஜயகுமார் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது.
டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கான காரணம் குறித்து கோவை மாநகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா நகர் துணை ஆணையர், காஞ்சிபுரம் எஸ்.பி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை விஜயகுமார் வகித்துள்ளார். அவரது தற்கொலை காவல்துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
விண்ணில் சீறிப்பாய தயாராகும் சந்திரயான்-3
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
மிகப்பெரிய அதிர்ச்சி…படிப்பு,பதவி,பொறுப்பு
இது எதிலயுமே தற்கொலை அடங்காதா!
ஆழ்ந்த வருத்தங்கள்..